முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வெற்றி அவசியம்: ஈரோட்டில் எடப்பாடி பிரச்சாரம்

செவ்வாய்க்கிழமை, 15 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஈரோட்டில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

ஈரோடு மாவட்டத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஆட்சியர் அலுவலகம் விரிவுபடுத்தப்பட்டது, குடிசை மாற்று வாரிய, அடுக்கு மாடி குடியிருப்புகள், மேம்பாலம், காலிங்கராயன் நினைவு மண்டபம், ஊராட்சிக் கோட்டை குடிநீர் திட்டம், சாலை மேம்பாடு என பல திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம்.

தி.மு.க. அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக ஸ்டாலினும், 90 சதவீதமும் நிறைவேற்றி விட்டதாக உதயநிதியும், மாறி, மாறி பொய் பேசுகின்றனர். சொன்னதை ஏன் செய்யவில்லை என்று மக்கள் கேட்கின்றனர். ஈரோடு மாவட்டம் அ.தி.மு.க. கோட்டை என பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனை மீண்டும் இந்த தேர்தலில் நிரூபிக்க வேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற இந்த தேர்தலில் வெற்றி அவசியம்.

தி.மு.க. தில்லுமுல்லு செய்து வெற்றி பெற நினைக்கிறது. அந்த கனவு ஒருபோதும் நிறைவேறாது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் நமக்கு மக்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து