Idhayam Matrimony

அஜித்தின் வலிமை விமர்சனம்

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

நேர் கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு அஜீத்குமாரும் எச். வினோத்தும் இணைந்திருக்கும் படம் வலிமை. ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் ஆவலுடன் எதிர்பார்த்த படம் தான் இந்த வலிமை. அஜித்தை ஆக்‌ஷன் ஹீரோவாக பார்க்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு வலிமை ஆக்ஷ்னை அள்ளி வழங்கியிருக்கிறது. கதை,  சென்னை நகரில் நவீன பைக் ரேசர்கள் சிலர் போதை பொருள் கடத்தல், செயின் பறிப்பு போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தினம் தினம் அதிகரிக்கும் இவர்களின் குற்றச் செயல்களால் சென்னை போலீஸ் திணருகிறது. இந்நிலையில் மதுரையில் துணை காவல் ஆணையராக இருந்து பட்டைய கிளப்பி வரும் அஜித்குமார் சென்னை ரவுடிகளை கட்டுப்படுத்த சென்னைக்கு

உடனடியாக அழைக்கப்படுகிறார். போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக வரும் ஹுமா குரேஷியுடன் இணைந்து சென்னையில் நடக்கும் கொலை ஒன்றை விசாரிக்க தொடங்குகிறார். விசாரணையில் சென்னையில் நடக்கும் அனைத்து குற்றங்களும் சாத்தானின் அடிமைகள் என்னும் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களால் தான் நடத்தப்படுகிறது என்பதை அஜீத் கண்டு பிடிக்கிறார். இந்நிலையில், அவரது தம்பியால் ஒரு புது பிரச்சனை உருவாக, அதனால் அஜித்தின் பதவி பறிக்கப்படுகிறது. பின்னர் என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை.

பரபரப்பான பைக் துரத்தல் காட்சிகள், விறுவிறுப்பான ஆக்ஷ்ன் என யோசிக்கவே நேரம் கொடுக்காமல் பரபரக்கிறது திரைக்கதை. இடைவேளையில் உருவாகும் திருப்பம் திரைக்கதைக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த திரைப்படத்திற்குமான திருப்பமாக அமைந்துவிடுகிறது. இடைவேளைக்குப் பிறகும் சண்டைக் காட்சிகளும் துரத்தல் காட்சிகளும் வந்தாலும், படம் தன் விறுவிறுப்பை இழக்கவில்லை. படத்தின் முக்கிய  கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹுமா குரேஷி ஃபைட்டில் கிளாப்ஸ் வாங்கியுள்ளார்.

வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள கார்த்திகேயா தனது நடிப்பில் மிரட்டியுள்ளார். மேலும் படத்தில் நடித்துள்ள மற்ற சில நடிகர்களும் தங்களின் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் திலீப் மாஸ்டரின் சண்டைக்காட்சிகளும் படத்ததுக்கு பக்க பலமாக நிற்கிறது, மொத்தத்தில் இந்த வலிமை ஒரு வளமான தரமான படைப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து