முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தவில்லை: ரஷ்ய அதிபர் புடின் மறுப்பு

சனிக்கிழமை, 5 மார்ச் 2022      உலகம்
Image Unavailable

குடியிருப்பு கட்டிடங்கள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானது என்று புடின் தெரிவித்துள்ளார். 

உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா குடியிருப்பு பகுதிகளிலும் குண்டுகள் வீசுவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் அதை ரஷ்ய அதிபர் புடின் மறுத்துள்ளார்.  

ஜெர்மனி அதிபர் ஓலாப் ஷோல்ஸ்சுடன் ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் பேசும் போது, 

உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தவில்லை என்றும் குடியிருப்பு கட்டிடங்கள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானது என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து