எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் 40 கிராம் வரை நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 40 கிராம் வரை (5 பவுன்) நகைகளை அடகு வைத்து கடன் பெற்றவர்களுக்கு அவர்களது கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஆட்சிக்கு வந்ததும் நகை கடன்கள் தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி நகர கூட்டுறவு வங்கிகள், மாவட்ட கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வாங்கியவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
கடன் தள்ளுபடி தொடர்பாக அரசு பல்வேறு நடைமுறைகளை பின்பற்றுமாறும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன் அடிப்படையில் நகை கடன் பெற்றவர்கள் தகுதியானவர்கள் தானா? என்று ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நகை கடன் தள்ளுபடி பெற்றவர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கூட்டுறவு தணிக்கைத்துறை இயக்குனர் மண்டல வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் 75 தணிக்கை அதிகாரிகளை நியமித்துள்ளார்.
கூடுதல் இயக்குனர், இணை இயக்குனர், துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், அந்தந்த மண்டலங்கள்-சரகங்களில் சோதனை தணிக்கையை தனித்தனியாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நகர கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும், 2-ம் கட்டமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இதர சங்கங்களில் தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு அதிகாரி சோதனை தணிக்கை மேற்கொண்ட கூட்டுறவு நிறுவனத்தை மீண்டும் பிற அதிகாரி சரிபார்க்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தணிக்கை அறிக்கை முடிந்ததும் சரக கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர்கள் மற்றும் மண்டல இணை இயக்குனர்கள் உடனடியாக தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்தில் தணிக்கை செய்ய இணை இயக்குனர் ரக்பியூதின் உசேன், மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலத்துக்கு கூடுதல் இயக்குனர் என்.எஸ்.சாரதா, கோவைக்கு இணை இயக்குனர் தனசேகரன், திருச்சிக்கு இணை இயக்குனர் சித்ரகலா, காஞ்சிபுரத்துக்கு விக்டர் பால்ராஜ், திருவள்ளூருக்கு மணி உள்ளிட்ட 75 அதிகாரிகள் அதில் இடம் பெற்றுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 2 weeks ago |
-
ஆஸி.யை வீழ்த்தி இந்திய அணி முன்னிலை பெறுமா? - 3-வது டெஸ்ட் இன்று பிரிஸ்பேனில் துவக்கம்
13 Dec 2024பிரிஸ்பேன் : இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்குகிறது.
-
கனமழை காரணமாக இன்று 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
13 Dec 2024நெல்லை, கனமழை காரணமாக இன்று 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
சட்டமன்ற நாட்களை குறைக்கும் விவகாரம் தி.மு.க. அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Dec 2024சென்னை: சட்டமன்ற நாட்களை குறைக்கும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.
-
நடிகர் அல்லு அர்ஜூன் கைது: ஜெகன் மோகன் கண்டனம்
13 Dec 2024ஐதராபாத், அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதற்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் 16-ம் தேதி முதல் மீண்டும் மழை: இந்திய வானிலை மையம் தகவல்
13 Dec 2024புதுடெல்லி, அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் மீண்டும் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம
-
சிறையில் இருந்து தப்பிய சீன பெண் கைது
13 Dec 2024வாஷிங்டன்: அமெரிக்காவில் சிறையில் இருந்து தப்பி ஓடிய சீன இளம்பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை: இறுதிக்கு முன்னேறியது மும்பை
13 Dec 2024பெங்களூரு : சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலி் பரோடாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு மும்பை அணி முன்னேறியுள்ளது.
-
டெல்லி சட்டசபை தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி
13 Dec 2024புதுடெல்லி, டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் 21 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
-
குற்றால அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
13 Dec 2024தென்காசி, குற்றால அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி குற்றாலம் பகுதியில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ள
-
மதுரையில் பெய்த கனமழையால் மீனாட்சியம்மன் கோவில் முன்பு குளம் போல் தேங்கிய மழை நீர்
13 Dec 2024மதுரை, மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
-
தி.மலை கார்த்திகை தீபத்திருவிழா: மலை உச்சியில் மகா தீபம் ஏற்றம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
13 Dec 2024தி.மலை, தி.மலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
-
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கி. டெஸ்ட் அணி அறிவிப்பு
13 Dec 2024இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
-
சிறுபான்மையினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வங்கதேசத்திற்கு இந்தியா வலியுறுத்தல்
13 Dec 2024புதுடெல்லி, வங்கதேசம் தனது சொந்த நலனுக்காக, சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என்று வெளியுறவுத்துறை
-
அடையாற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்கள் வெளியேற்றம்
13 Dec 2024சென்னை, அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரப் பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
-
எம்.ஜி.ஆர். திரைப்படக்கல்லூரியில் மூன்று புதிய படப்பிடிப்பு தளங்கள் அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்
13 Dec 2024சென்னை: எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய 3 புதிய படப்பிடிப்புத் தளங்களை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
-
அரசியலமைப்பை கபளீகரம் செய்ய முயற்சி: காங். மீது ராஜ்நாத் சிங் மறைமுக தாக்கு
13 Dec 2024டெல்லி: குறிப்பிட்ட கட்சி' அரசியலமைப்பை கபளீகரம் செய்ய முயல்கிறது என்று பார்லி. மக்களவையில் காங்கிரஸ் கட்சி மீது ராஜ்நாத் சிங் மறைமுகமாக தாக்கி பேசினார்.
-
ஏ.ஐ. தொழில்நுட்பம் நம்மை அடிமையாக்கும்: யுவால் நோவா ஹராரி எச்சரிக்கை
13 Dec 2024மும்பை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம் கட்டுப்பாட்டில் இருந்து விலகி நம்மை அதன் அடிமையாக்கும் என வரலாற்று துறை பேசாரியரும், எழுத்தாளருமான யுவால் நோவா ஹராரி தெரிவித
-
குரூப் 2,4 தேர்வு பாடத்தில் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி. புதிய அறிவிப்பு
13 Dec 2024சென்னை, குரூப்2, குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் ஒரே நாளில் 1,500 பேருக்கு தண்டனை குறைப்பு: அதிபர் ஜோ பைடன் நடவடிக்கை
13 Dec 2024வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் பதவி விலக உள்ள நிலையில், ஒரே நாளில் சுமார் 1500 பேரின் தண்டனைகளை குறைத்துள்ளார்.
-
ரேணுகாசாமி கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக ஐகோர்ட் ஜாமீன்
13 Dec 2024பெங்களூரு, ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
-
அவரை மாதிரி ஒரு கேப்டனை பார்த்ததில்லை: எம்.எஸ்.டோனியை புகழ்ந்த லக்னோ அணி உரிமையாளர்
13 Dec 2024மும்பை : அவரை மாதிரி ஒரு கேப்டனை பார்த்ததில்லை என்று எம்.எஸ்.டோனிக்கு லக்னோ அணி உரிமையாளர் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
ரிசர்வ் வங்கிக்கு இ-மெயிலில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
13 Dec 2024மும்பை, மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு ஒரே மாதத்தில் 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
-
தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிக்கு மத்திய அரசின் விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் வாழ்த்து
13 Dec 2024சென்னை: தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளுக்கு 5 விருதுகள் வழங்கப்பட்டது.
-
உலக செஸ் சாம்பியன் பட்டம்: குகேஷ்-க்கு சந்திரபாபு நாயுடு தெரிவித்த வாழ்த்தால் சர்ச்சை
13 Dec 2024ஐதராபாத், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ்-க்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்த வாழ்த்தால் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
பார்லி.யில் தொடர் அமளி: ஜாக்கி வாசுதேவ் கோரிக்கை
13 Dec 2024புதுடெல்லி, பாராளுமன்றத்தில் தொடர் அமளி நிலவி வரும் நிலையில் சமூக வலைதளத்தில் சத்குரு ஜாக்கி வாசுதேவ் கருத்து தெரிவித்துள்ளார்.