முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.ஆர்.ஆர்.விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

பாகுபலி என்ற சூப்பர் டூப்பர் படத்தைக் கொடுத்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி இருக்கும் படம்தான் இந்த ஆர்.ஆர்.ஆர்.திரைப்படம். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரக்கனி ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள படம் தான் இந்த ஆர்.ஆர்.ஆர். கதை, படத்தின் தொடக்கத்தில் ஒரு சிறுமி ஆங்கிலோயர்களால் கடத்தப்படுகிறாள். அடுத்து வரும் நாயகன் ராம்சரண் சுமார் ஆயிரம் பேரை ஒரே குச்சியால் அடித்து துவைத்து எடுக்கிறார். மூன்றாவதாக வரும் மற்றொரு நாயகனான ஜூனியர் என்.டி.ஆர் காட்டுக்குள் புலியையும் கரடியையும் நேருக்கு நேர் மோத விட்டு பின், புலியை முகமுகமாக பார்த்து மிரட்டி பயமுறுத்துகிறார். இப்படியாக செல்கிறது படம். முதல் பாதியில் சுமாராக செல்லும் ஆர்.ஆர்.ஆர். இரண்டாம் பாதி வழக்கமான தொலுங்கு மசாலா கதை, பாடல்களும் இசையும் சுமார் ரகமே, முழுக்க முழுக்க மதச்சாயம் பூசப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது இப்படம். எல்லோருக்கும் பிடித்த அழகிய பாகுபலி போல இந்த ஆர்.ஆரும் இருக்கும் என்று எதிர்பார்த்து போனால் ஏமாற்றமே. படத்தில் பட இடங்களில் பாகுபலி இசை வந்து போகிறது. படத்தில் தொடக்கத்தில் கடத்தப்படும் கிராமத்து சிறுமி படம் முடியும் வரை எதற்காக கடத்தப்படுகிறாள் என்று சொல்லவே இல்லை. இத்தனை பெரிய நடிகர் பட்டாளத்தை வைத்துக்கொண்டு அவர்களை வீணடித்துவிட்ட உணர்வே வந்து போகிறது. மொத்தத்தில் இந்த ஆர்.ஆர்.ஆர். ஒரு சுமாரான டப்பிங் மூவி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!