முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல், குருணால் பாண்ட்யா அசத்தல்: லக்னோவிடம் வீழ்ந்து மும்பை முதல் அணியாக வெளியேறியது

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2022      விளையாட்டு
Rahul-Kurunal 2022-04-25

ராகுல், குருணால் பாண்ட்யா அசத்தல் பேட்டிங்கால் லக்னோவிடம் வீழ்ந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது மும்பை அணி.

மும்பை பீல்டிங்...

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் 62 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 103 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 

169 ரன்கள் இலக்கு... 

மும்பை சார்பில் பொல்லார்டு, மெரிடித் தலா 2 விக்கெட் எடுத்தனர். டேனியல் சாம்ஸ், பும்ரா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.  இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. இஷான் கிஷண் 8 ரன்னிலும், ப்ரெவிஸ் 3 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 7 ரன்னிலும் அவுட்டாகினர். கேப்டன் ரோகித் சர்மா 39 ரன்னில் வெளியேறினார்.

லக்னோவுக்கு 5-வது...

ஒரு கட்டத்தில் 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. திலக் வர்மா, பொல்லார்டுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. திலக் வர்மா 38 ரன்னில் அவுட்டானார். பொல்லார்டு 19 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், மும்பை அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது லக்னோ அணி பெறும் 5வது வெற்றியாகும். மும்பை அணி தொடர்ந்து 8வது தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி மூலம் 8 தொடர் தோல்விகளை சந்தித்த மும்பை அணி ஐ.பி.எல். தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது.

ரோஹித்  வருத்தம்

ஆட்டத்துக்குப் பிறகு ரோஹித் சர்மா பேட்டியளித்ததாவது., இதுபோன்ற இலக்கு நிர்ணயிக்கப்படும்போது நல்ல கூட்டணி அமையவேண்டும். அது எங்களுக்கு அமையவில்லை. நான் உள்பட எங்களுடைய பேட்டர்கள் சிலர் பொறுப்பற்ற முறையில் ஷாட் விளையாடியதால் இன்னிங்ஸுக்குத் தேவைப்படுகிற சீரான் ரன் குவிப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை.  எங்கள் பேட்டர்களிடம் தன்னபிக்கை இல்லை என்றும் கூறலாம். 

இந்த வருடப் போட்டியில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. எல்லாமே பேட்டிங் குழுவைப் பொறுத்துதான் அமையும். களத்தில் உள்ள பேட்டர்கள் ரன்கள் குவிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பேட்டராவது அதிக ஓவர்களுக்கு விளையாடுவதுபோலப் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த வருடம் இதைச் செய்ய நாங்கள் தவறிவிட்டோம். எங்களுடைய பேட்டர் யாரும் நீண்ட நேரம் விளையாடவில்லை. ஆனால் மற்ற அணிகளின் பேட்டர்கள் அதைச் செய்துள்ளார்கள். எவ்விதச் சூழலாக இருந்தாலும் ஒரு பேட்டர் அதிகப் பந்துகளை எதிர்கொள்ளுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து