முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனுக்கு பிரபல ஹாலிவுட் நடிகை அஞ்சலின திடீர் பயணம் குழந்தைகள், தன்னார்வலர்களை சந்தித்தார்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2022      உலகம்
HOLY-WOOD2022-05-01

Source: provided

கீவ் : உக்ரைனிய நகரமான கீவ்வுக்கு ஹாலிவுட் நடிகையான அஞ்சலின ஜூலி பயணம் மேற்கொண்டுள்ளார். ரயில்வே நிலையம், பேக்கரிக்கு சென்ற அவர் ரஷ்ய போரால் இடம்பெயர்ந்துள்ள மக்களிடம் கலந்துரையாடினார்.

ரயில்வே நிலையத்தில் இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவி செய்து வரும் தன்னார்வலர்களுடனும் அவர் கலந்துரையாடினார். அப்போது, நாள் ஒன்றுக்கு 15 பேருக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருவதாக அஞ்சலின ஜூலியிடம் தன்னார்வலர்கள் தெரிவித்தனர். ரயில்வே நிலையத்தில் உள்ள பெரும்பான்மையானோர் 2 லிருந்து 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றும் தன்னார்வலர்கள் கூறினர்.

இதற்கு பதிலளிக்கும் விமதாக பேசிய ஜூலி, அவர்கள் அதிர்ச்சியில் இருக்க வேண்டும். குழந்தைகளை அதிர்ச்சி எவ்வாறு பாதிக்கிறது என்பதை நான் அறிவேன். அவர்கள் எவ்வளவு முக்கியம், நாம் அந்த குழந்தைகளுடம் இருப்பதும் கொடுக்கப்படும் அரவணைப்பும் எவ்வளவு முக்கியம், அவர்களின் குரல்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும் நான் அறிவேன் என்றார். 

சிவப்பு நிற உடை அணிந்த சிறுமிக்கு ஜூலி சிரிப்பு மூட்டியது பார்ப்பவர்களை கண் கலங்க வைத்தது. பின்னர், குழந்தைகளுடனும் தன்னார்வலர்களுடனும் அவர் புகைப்படம் எடுத்து கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து