முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் எதிர்காலத்தை இளைஞர்கள் உருவாக்குகிறார்கள்: அமித் ஷா பேச்சு

செவ்வாய்க்கிழமை, 3 மே 2022      இந்தியா
AMIT-SHAH 2022 01 11

இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்தையும் தன்மையையும் உருவாக்குகிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு நேற்று அடிக்கல் நாட்டினார். பெங்களூரு சாளுக்கிய வட்டத்தில் உள்ள பசவேஸ்வரா சிலைக்கு அமித் ஷா மற்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர், நகரின் சத்னூர் கிராமத்தில் பெங்களூரு தேசிய புலனாய்வு கிரிட் வளாகத்தையும் அமித் ஷா திறந்து வைத்தார். பெல்லாரியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தையும் அமித் ஷா திறந்து வைத்தார். 

பெங்களூருவில் உள்ள ந்ருபதுங்கா பல்கலைக்கழகத்தில் அடிக்கல் நாட்டிய மத்திய அமைச்சர் அமித் ஷா பின்னர் பேசியதாவது:- 75 வருட பயணத்தில், நாடு பல இடங்களைக் கடந்து இன்று இங்கு நிற்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் அவரவர் வழியில் பங்களித்துள்ளனர். நாட்டின் இளைஞர்கள் உலக அளவுக்கு இணையாக உயர்கல்விக்கான உள்கட்டமைப்பை பிரதமர் மோடி உருவாக்கி வருகிறார். எந்தவொரு நாட்டின் எதிர்காலமும் இளைஞர்களாலும் அவர்களின் குணத்தாலும் கட்டமைக்கப்படுகிறது.

கர்நாடகா காவல்துறையின் ஒரு முயற்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இது முழு கர்நாடகாவிலும் தொடங்கப்படும்போது ஏழைகள் முதல் மிகவும் ஏழையாகவுள்ளவர்களுக்கு வரை இந்த சேவைகள் சென்றடையும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து