முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினசரி பாதிப்பு சற்று அதிகரிப்பு: இந்தியாவில் 2,897 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

புதன்கிழமை, 11 மே 2022      இந்தியா
India-Corona 2022 04 17

Source: provided

புதுடெல்லி : தினசரி பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் 2,897 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 2,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. முந்தைய நாள் பாதிப்பு 2,288 ஆக இருந்த நிலையில், நேற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 1,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியானாவில் 401, கேரளாவில் 346, உத்தரபிரதேசத்தில் 278, மகாராஷ்டிரத்தில் 223, கர்நாடகாவில் 129 பேருக்கு தொற்று உறுதியானது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 10 ஆயிரத்து 586 ஆக உயர்ந்தது. கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 48 மரணங்கள் மற்றும் நேற்று முன்தினம் மகாராஷ்டிரத்தில் 2, உத்தரபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், இமாச்சல பிரதேசத்தில் தலா ஒருவர் என மேலும் 54 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பால் பலியானவர்கள் எண்ணிக்கை 5,24,157 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று முன்தினம் 2,986 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 66 ஆயிரத்து 935 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 19,494 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 143 குறைவு ஆகும். நாடு முழுவதும் இதுவரை 190 கோடியே 67 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து