முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத், இமாச்சல் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் : பிரசாந்த் கிஷோர் கணிப்பு

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      இந்தியா
Prasanth-Kishore 2022-04-26

Source: provided

புதுடெல்லி : குஜராத், இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், "உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் பற்றி கருத்து சொல்லுமாறு என்னை அடிக்கடி கேட்டு வருகின்றனர். என்னைப் பொருத்தவரை, அந்தக் கூட்டம் அர்த்தமுள்ளதாக எந்த முடிவையும் எட்டவில்லை.

தன் இருப்பை உறுதி செய்துள்ளதோடு, காங்கிரஸ் தலைமையில் காலத்தை நீட்டித்துள்ளதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. குஜராத், இமாச்சலப்பிரதேச சட்டசபை தேர்தல்களில் படுதோல்வி அடையும்" என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து