எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொழும்பு : இலங்கையில் வன்முறை தணிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து, இலங்கையில் அவசர நிலை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால், இலங்கை சுதந்திரம் பெற்ற கடந்த 1948- ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாததால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் மின் விநியோகம் பாதித்தது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. பொருட்களின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தன. தொடர் போராட்டங்களால் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார்.
இதையடுத்து, அரசு ஆதரவாளர்களுக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே வெடித்த மோதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். நுற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இதனால், இலங்கை முழுவதும் வன்முறை பரவிய நிலையில், கடந்த 6-ம் தேதி நாட்டில் அவசர நிலை பிறப்பித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார்.
இதையடுத்து, இலங்கையில், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசு அமைந்தது. தொடர்ந்து இலங்கையில் வன்முறை தணிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இதையடுத்து, இலங்கையில் அவசர நிலை திரும்பப் பெறப்பட்டுள்ளது. அவசர நிலை சட்டமானது மக்களை தன்னிச்சையாக கைது செய்து தடுத்து வைக்கும் அதிகாரத்தை பாதுகாப்பு படையினருக்கு வழங்குகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


