எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மக்கள் தலைவராக இருந்து நவீன தமிழகத்தை உருவாக்கியவர் கருணாநிதி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
வாழ்வில் ஒரு பொன்னாள் என எந்நாளும் போற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது. பெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையிலே கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 2001-ம் ஆண்டு அன்றைய ஆட்சியாளர்களால் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது வெங்கையா நாயுடு அன்றைய ஆட்சியாளர்களை கடுமையாக கண்டித்தார். அவர் கருணாநிதி சிலையை திறந்து வைப்பதில் உள்ளதிலேயே பெருமை. நட்புக்குரிய இனிய நண்பராகவே துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இருக்கிறார். நாட்டில் பல ஜனாதிபதிகளை உருவாக்கியவர் கருணாநிதி.
தமிழகத்தில் 5 முறை ஆட்சியில் இருந்து நவீன தமிழகத்தை உருவாக்கியவர் கருணாநிதி. அண்ணாவிற்குப் பிறகு தி.மு.க.வை இறுதி மூச்சு வரை காத்தவர் கருணாநிதி. இலக்கியம், திரைத்துறை, எழுத்து என அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர் அவர். பராசக்தி, பூம்புகார் படத்தின் வசனங்கள் இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
கலைஞர் தீட்டிய திட்டத்தால் தமிழகத்தில் ஒவ்வொருவரும் பயன்பெற்றிருப்பர். தமிழகத்தில் அவர் தீட்டிய திட்டங்களால் பயனடைந்தவர்கள் ஏராளம். அனைத்து மக்களின் தலைவராக இருந்தவருக்கு இன்றைக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு எத்தனை சிலை அமைத்தாலும் ஈடாகாது. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


