முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இணைந்தார் ஹர்திக் படேல்: உலகின் அடையாளம் மோடி என புகழாரம்

வியாழக்கிழமை, 2 ஜூன் 2022      அரசியல்
Hardik-Patel-2022-06-02

பிரதமர் நரேந்திர மோடி இந்த ஒட்டுமொத்த உலகின் பெருமித அடையாளம்" என பாஜகவில் இணைந்த ஹர்திக் படேல் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். ஹர்திக் படேலை வரவேற்று குஜராத் பாஜக அலுவலகத்தில் பிரம்மாண்ட பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

பாஜகவில் இணைந்த ஹர்திக் படேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் பாஜகவில் இணைந்துள்ளேன். கட்சியில் ஒரு தொண்டனாகப் பணியாற்றப் போகிறேன். எனக்கென்று எந்தப் பதவியையும் நான் கட்சி மேலிடத்தில் கேட்கவில்லை. பணி செய்வதற்காகவே பாஜகவில் இணைந்துள்ளேன். காங்கிரஸில் யாரும் எந்த வேலையும் செய்வதில்லை. ஆகையால், காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பாஜகவுக்கு வர வேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி ஒட்டுமொத்த உலகின் பெருமித அடையாளம். தேசத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்களோடு மக்கள் தங்களை தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள். நானும் அதையே செய்யும் பொருட்டு பாஜகவில் இணைந்துள்ளேன்" என்றார்.

முன்னதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”நான் ஒரு புதிய அத்தியாத்தை தொடங்கவுள்ளேன். தேசிய, சமூக, பிராந்திய நலனுக்கான எண்ணங்களுடன் இந்த அத்தியாயம் தொடங்குகிறது. தேசத்துக்கான மாபெரும் சேவையில் நான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒரு சிறிய வீரனாக இருப்பேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!