முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 15,000 இணையதள கருவிகளை உக்ரைனுக்கு அனுப்பிய எலான் மஸ்க்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2022      உலகம்
Elon-Musk 2022 06 13

Source: provided

கீவ் : உக்ரைனுக்கு மேலும் சுமார் 15,000 இணையதள கருவிகள் அனுப்பப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில் நிதி மற்றும் ஆயுத உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

இதே போல் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு தனது ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவைகளை வழங்கி வருகிறார். 

இந்நிலையில் தற்போது உக்ரைன் ராணுவம் பயன்படுத்தும் வகையில் அவர் மேலும் சில ஸ்டார்லிங் செயற்கைக் கோள் இணையதள கருவிகளை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 

உக்ரைனுக்கு சுமார் 15,000 இணையதள கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 10,000 கருவிகள் அனுப்பப்பட்டது. இத்துடன் சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் பெறும் டெஸ்லா கருவிகளையும் உக்ரைன் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக அனுப்பியுள்ளோம் என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து