முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கக்கனின் 114-வது பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி டுவீட்

சனிக்கிழமை, 18 ஜூன் 2022      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : கக்கனின் பிறந்தநாளில் அவர்தம் பெருமையை போற்றி வணங்குகிறேன் என்று அ.தி.மு.க.இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

சுதந்திரப் போராட்ட தியாகியும், தமிழக முன்னாள் அமைச்சருமான கக்கனின் 114-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவரை வணங்கி தமிழக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

வறுமை வாட்டிய போதும் தன் செம்மை வழுவாமல், நேர்மை, எளிமை இவ்விரண்டையும் தன் அருங்குணங்களாக கொண்டு தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்த தமிழக முன்னாள் அமைச்சர், அவருக்கு நிகர் அவரே அன்றி வேறில்லை என்று வாழ்ந்த தியாகசீலர் கக்கன். அவரது பிறந்தநாளில் அவர்தம் பெருமையை போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து