முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டத்திற்கு புறம்பான தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம்: மேடையில் வைத்திங்கம் ஆவேசம்

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      அரசியல்
Admk-2022-06-23

சட்டத்திற்கு புறம்பான தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று அ.தி.மு.க.பொதுக்குழு மேடையில் ஆவேசமாக அறிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார் வைத்திலிங்கம்.

அ.தி.மு.க.செயற்குழு மற்றும் பொதுக்குழு நேற்று காலை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்படுவதாக கே.பி.முனுசாமி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க.அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் அறிவிக்கப்பட்டார். அவரிடம் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க அடுத்த பொதுக்குழு கூட்ட தேதியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.

அப்போது, மேடைக்கு வந்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், "சட்டத்திற்கு புறம்பான இந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்" என்று ஆவேசமாக அறிவித்துவிட்டு வெளியேறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!