முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் பலாத்கார வழக்கில் பாப் பாடகருக்கு 30 ஆண்டு சிறை

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      உலகம்
Kelly 2022 06 30

பிரபல பாடல்களை பாடிய பாப் பாடகர் ஆர்.கெல்லி, பல பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் வசித்து வருபவர் இசை நட்சத்திரம் கெல்லி என்று அழைக்கப்படுகிற ராபர்ட் கெல்லி.  இவர் ஆர் அண்ட் பி என்று அழைக்கப்படுகிற ரிதம் அண்ட் புளூஸ் இசையில் பிரபலமானவர். இவர் மீது ஏராளமான செக்ஸ் புகார்கள் குவிந்தன. பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு. இவர் எல்லா குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறார். ஆனாலும் கடந்த மாதம் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

சிகாகோ, புரூக்ளின் கோர்ட்டுகளில் கெல்லிக்கு எதிராக 2 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் கெல்லியும், அவரது கூட்டாளிகளும் சிறுமிகளை வேலைக்கு அமர்த்தி, கடத்திக் கொண்டு போய் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் ஆபாச படங்களும் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. வழக்குகளில் தொடர்புடைய சாட்சிகளை மிரட்டியும், பணம் கொடுத்தும் நீதித்துறை நடவடிக்கைக்கு ஊறு விளைவிக்க முயற்சித்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது. அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து