முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிறைவேறிய 17 வருட கனவு சாரத்

திங்கட்கிழமை, 11 ஜூலை 2022      சினிமா
Sarath 2022 07-11

Source: provided

சந்திரபாபு பிலிம் பேக்டரி சார்பில் புதுமுகம் சாரத் ஹீரோவாக நடித்து இயக்கி தயாரித்துள்ள படம் தெற்கத்தி வீரன். முழுமையான பொழுதுபோக்கு, ஆக்ஷ்ன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ் விழாவில், இப்படத்தின் இயக்குநரும், நடிகருமான சாரத் பேசுகையில், ஒரு உண்மை சம்பவத்தை தழுவி அதில் கமர்சியல் கலந்து இப்படத்தை உருவாக்கி இருப்பதாக கூறினார். ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட வேண்டும் என்பது எனது 17 வருட கனவு, இப்போது அது நிறைவேறியுள்ளது என்றார். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தில் முருகா அசோக் குமார், கபீர் துஹான் சிங், மதுசூதனன், பவன், வேலா ராமமூர்த்தி, நமோ நாராயணா, பரணி, வினோத், ரேணுகா, உமா பத்மநாபன், ராஜசிம்மன், ஆர்யன், ஆர்.என்.ஆர் மனோகர், ரித்திகா மற்றும் முல்லை ஆகியோர் நடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து