முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கயல் ஆனந்தி நடிக்கும் நதி

திங்கட்கிழமை, 18 ஜூலை 2022      சினிமா
Kayal-Anandi 2022 07-18

Source: provided

தாமரை செல்வன் இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி நடித்துள்ள நதி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின் நாயகன் சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி, கரு.பழனியப்பன், வடிவேல் முருகன், ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கயல் ஆனந்தி, இக்கதையை கேட்டதுமே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று உடனே தோன்றியது. இக்கதைக்கு தேவையானது போல் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினரை இயக்குநர் பயன்படுத்தியுள்ளார். அனைவரும் படம் பார்த்துவிட்டு சப்போர்ட் செய்யுங்கள். மேலும் நல்ல கதைகள் கிடைத்தால் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்று கூறினார். பின்னர் பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன், ஒரு உண்மைக் கதையை சிறப்பாக இயக்குநர் எடுத்துள்ளார். நான் சமீபத்தில் பார்த்த படங்களில் மிக சிறப்பான இடைவேளைக் காட்சி இப்படத்தில் உள்ளது. இப்போது சினிமா மிகப் பிரமாதமாக உள்ளது. ஆனந்தி நிறைய படங்களில் நடிக்க வேண்டும். தற்போது சினிமாவில் கதாநாயகிகளுக்கான இலக்கணமும் மாறிவிட்டது. அழகாக இருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. நன்றாக நடித்தால் போதும். இப்படம் ஆனந்தியின் சினிமா வாழ்க்கையில் சிறந்த படமாக இருக்கும்” என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து