எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தடையை மீறி இளம்பெண் ஒருவர் தனது சகோதரியுடன் இணைந்து வீட்டிலேயே ரகசிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஆட்சி முறையில் பல மாற்றங்களை செய்தனர். குறிப்பாக, பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர்.
சிறுமியர் பள்ளிக்கு செல்ல தடை விதித்தனர். ஆனால், கல்லூரிக்கு செல்வதை தடுக்கவில்லை. இதனால், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவியர் ஓராண்டாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் காபூலில் வசிக்கும் சோடாபா நஜந்த் என்ற இளம்பெண் தன் சகோதரியுடன் சேர்ந்து வீட்டிலேயே ரகசிய பள்ளி நடத்துகிறார். தலிபான்களின் அட்டூழியத்தால் பள்ளிக் கல்வியை இழந்து தவிக்கும் சிறுமியருக்கு ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களை கற்பித்து வருகிறார்.
இதுகுறித்து சோடாபா நஜந்த் கூறுகையில், இந்தச் சிறுமியருக்கு கல்வி கற்பிப்பதன் வாயிலாக தலிபான்களின் முடிவை எதிர்க்கிறேன். ஆப்கானிஸ்தானின் பல இடங்களில் கடந்த ஓராண்டாக இது போன்ற ரகசிய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இதன் வாயிலாக சிறுமியர் பாடங்களை கற்றாலும் அதற்கான அரசு சான்றிதழ் பெற முடியாது. இந்த நிலை மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


