முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனது வீட்டில் தேசியக்கொடியை ஏற்றிய மத்திய அமைச்சர் அமித்ஷா

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      இந்தியா
AMIT-SHAH 2022 01 11

Source: provided

புதுடெல்லி : வீடுதோறும் மூவர்ண கொடி பிரசாரத்தின் ஒரு பகுதியாக உள்துறை மந்திரி தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார்.

நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. இதனை தொடர்ந்து டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோந்து பணியிலும் ஈடுபட்டு உள்ளனர்.

சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஹர்கர் திரங்கா என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றுவோம் என அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதன்படி, நேற்று முதல் வரும் 15-ம் தேதி வரை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டில் தேசிய கொடியை ஏற்றும்படி கேட்டு கொண்டுள்ளது. இதனை முன்னிட்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது வீட்டின் மேல்தளத்திற்கு சென்று, நாட்டின் மூவர்ண கொடியை உயர ஏற்றியுள்ளார். அவரது மனைவி சோனல்ஷாவும் உடன் இருந்து கொடியேற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து