முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டச்சத்து பற்றாக்குறையை நீக்கும் முயற்சியில் அனைவரும் ஈடுபடுங்கள் : நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2022      இந்தியா
modi-2022 07 15

Source: provided

புதுடெல்லி : நாட்டில் ஊட்டச்சத்து பற்றாக்குறையை நீக்கும் முயற்சிகளில் மக்கள் அனைவரும் ஈடுபட வேண்டும் என மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கேட்டு கொண்டார். 

பிரதமர் மோடி மான் கீ பாத்  என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த மாதத்திற்கான மான் கீ பாத் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது, 

நாட்டின் சுதந்திர தினத்தின்போது, வீடுதோறும் மூவர்ண கொடி ஏற்றும் நிகழ்ச்சியை புதுமையான முறையில் செயல்படுத்தியதற்காக எனது பாராட்டுகள். ஊட்டச்சத்து பற்றாக்குறையில் இருந்து நாடு விடுபட ஜலஜீவன் திட்டம் பெரும் பங்காற்றி வருகிறது. ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் படி உங்கள் அனைவரையும் நான் கேட்டு கொள்கிறேன்.

நாட்டு மக்கள் மற்றும் நம்முடைய சிறு விவசாயிகள் பயன்பட கூடிய வகையிலான, சிறு தானியங்களின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து