முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான தோல்வி: பந்து வீச்சாளர் மீது ரோகித் பாய்ச்சல்

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2022      விளையாட்டு
Rohit-Sharma 2022--09-21

Source: provided

மொகாலி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

ஹர்த்திக் பாண்டியா...

மொகாலியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 30 பந்தில் 71 ரன்னும் (7 பவுண்டரி, 5 சிக்சர்), லோகேஷ் ராகுல் 35 பந்தில் 55 ரன்னும் ( 4 பவுண்டரி , 3 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் 25 பந்தில் 46 ரன்னும் ( 2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டும் , ஹாசல்வுட் 2 விக்கெட்டும் , கேமரூன் கிரீன் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

ஆஸி. வெற்றி...

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 4 பந்து எஞ்சி இருந்த நிலையில் 209 ரன் இலக்கை எடுத்து சாதித்தது. அந்த அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் கேமரூன் கிரீன் 30 பந்தில் 61 ரன்னும் ( 8 பவுண்டரி , 4 சிக்சர் ), மேத்யூ வேட் 21 பந்தில் 45 ரன்னும் ( 6 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்டீவ் சுமித் 24 பந்தில் 35 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

ரோகித் குற்றச்சாட்டு...

அக்‌ஷர் படேல் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், யுசுவேந்திர சாஹல் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்திய அணி 208 ரன் குவித்தும் தோற்றது பரிதாபமே. பந்து வீச்சு அந்த அளவுக்கு மோசமாக இருந்தது. பீல்டிங்கிலும் பல கேட்ச்களை தவற விட்டனர். தோல்விக்கு பிறகு பேசிய ரோகித் சர்மா பந்து வீச்சாளர்களை கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஹர்திக் அதிரடி...

208 என்பது மிகவும் நல்ல ஸ்கோராகும். இதை பந்து வீச்சாளர்கள் தக்க வைக்க தவறி விட்டனர். நாங்கள் நன்றாக பந்து வீசவில்லை. பேட்ஸ்மேன்கள் நல்ல முயற்சி எடுத்து 200 ரன்னுக்கு கொண்டு வந்தனர். பந்து வீச்சாளர்கள் நேர்த்தியுடன் பந்து வீசவில்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் 200 ரன்களை குவிக்க முடியாது. ஹர்திக் பாண்ட்யாவின் பேட்டிங் அதிரடியாக இருந்தது. ஸ்கோரை உயர்ந்த நிலைக்கு எடுத்து சென்றார். அடுத்த ஆட்டத்துக்குள் பந்து வீச்சு குறித்து கவனம் செலுத்தியாக வேண்டும். 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு நாம் பார்க்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. என்ன தவறு நடந்தது என்பதை புரிந்து கொள்வது எங்களுக்கு சிறந்த விளையாட்டாக இருந்தது. இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

நாளை நடக்கிறது...

கடைசி கட்ட ஓவர்களில் (டெத் ஓவர்) சிறப்பாக வீசக்கூடிய புவனேஷ்வர் குமார், ஹர்சல் படேல் மற்றும் சாஹல் நேற்று மோசமாக வீசி ரன்களை அள்ளிக்கொடுத்தனர். புவனேஷ்வர் குமார் 4 ஓவரில் 52 ரன்னும், ஹர்சல் படேல் 4 ஓவரில் 49 ரன்னும், சாஹல் 3.2 ஓவரில் 42 ரன்னும் விட்டுக் கொடுத்தனர். இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் வருகிற நாளை (23-ந்தேதி) நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து