முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆ.ராசா பற்றி கேள்வி எழுப்பிய நிருபர்கள்: பதில் சொல்லாமல் எழுந்து சென்றார் மதுரை ஆதீனம்..!

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      இந்தியா
Aathinam 2022-09-22

Source: provided

திருவெண்ணைநல்லூர்: ஆ.ராசா பற்றி கேள்வி எழுப்பிய நிருபர்களுக்கு பதில் சொல்லாமல் கோபத்தில் மதுரை ஆதீனம் எழுந்து சென்றார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் உள்ள சிவன் கோவிலுக்கு மதுரை ஆதீனம் நேற்று காலை வந்தார். அப்போது கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மதுரை ஆதீனம் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது நிருபர்கள் இந்துக்கள் பற்றி ஆ.ராசா அவதூறாக பேசி வருகிறாரே. உங்கள் கருத்து என்ன என்று கேட்டனர். அதற்கு மதுரை ஆதீனம் பதில் தெரிவிக்க மறுத்து விட்டார். தொடர்ந்து நிருபர்கள் மதுரை ஆதீனத்திடம் ஆ.ராசா பற்றியே கேள்வி எழுப்பினர். ஆனால் மதுரை ஆதீனம் இதற்கு பதில் அளிக்காமல் எழுந்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து