முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஒற்றுமை நடை பயணம்: கர்நாடகாவில் ராகுலுடன் பங்கேற்ற சோனியா காந்தி

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      இந்தியா
Soniya-Ghanthi 2022-10-06

Source: provided

மாண்டியா: கர்நாடகாவில் நேற்று மீண்டும் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். உடல்நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த சோனியா காந்தி நடை பயணத்தில் பங்கேற்று நடந்தார்.

விஜயதசமிக்கு பின்னர் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணம் நேற்று (செப்.6) காலையில் மாண்டியா பகுதியில் மீண்டும் தொடங்கியது. இதில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு தொண்டர்கள் தலைவர்கள் சூழ சிறிது தூரம் நடந்தார். பின்னர் காரில் ஏறிச்சென்றார்.

விரைவில் தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் விதமாக, மாலையில் பெல்லாரியில் நடைபெற இருக்கும் பேரணிக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசுவார் என்று எதிர்க்கப்படுகிறது. முன்னதாக, புதன்கிழமை சோனியா காந்தி பெகூர் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சென்று வழிபட்டார்.

இதுகுறித்து கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் நடை பயணத்தில் சோனியா காந்தி கலந்து கொண்டது கட்சிக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார், மேலும் அவர், "விஜய தசமிக்கு பின்னர் கர்நாடகாவில் விஜயதசமி நடக்கிறது கர்நாடகா வீதிகளில் சோனியா காந்தி நடந்திருப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. கர்நாடகாவில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். பாஜகவின் ஆட்சி முடியும் தருவாயில் உள்ளது" என்று கூறினார்

முன்னதாக, காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல்காந்தி செப்,7 ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து இந்திய ஒற்றுமை நடை பயணம்யைத் தொடங்கினார். இந்த நடை பயணம்யின் மூலம், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 12 மாநிலங்களில் சுமார் 3,500 கி.மீ.,க்கும் மேல் நடக்கத்திட்டமிட்டுள்ளார். தமிழகம் கேரளா ஆகிய மாநிலங்களில் நிறைவடைந்த நடை பயணம் செப்.30 ம் தேதி கர்நாடகாவிற்குள் நுழைந்ததது.

இந்த நடை பயணத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி திங்கள் கிழமை மைசூர் வந்தடைந்தார். இந்த நடை பயணம் ஆயுத பூஜை, விஜய தசமிக்காக செவ்வாய் புதன் ஆகிய இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து