முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிலேயே முதன்முறையாக இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். பாட புத்தகங்கள் : மத்திய அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2022      இந்தியா
Amit-Shah 2022--10-16

Source: provided

போபால் : இந்தியாவிலேயே முதன்முறையாக இந்திமொழியில் எம்.பி.பி.எஸ். பாடப்புத்தகங்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

போபாலில் எம்.பி.பி.எஸ். பாடப் புத்தக இந்திப்பதிப்பு வெளியீட்டு நிகழ்வை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மாநில மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

அதை தொடர்ந்து அமித்ஷா பேசுகையில், பிரதமர் மோடி, புதிய கல்விக் கொள்கையின் கீழ் இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம், மாணவர்களின் தாய்மொழிக்கு பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. இந்தியாவின் கல்வித் துறைக்கு மிக முக்கியமான நாள் என்பதால் இந்த நாள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து