முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை கால்பந்து: ஜெர்மனியை வீழ்த்தியது ஜப்பான்

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      விளையாட்டு
Japan 2022 11 23

Source: provided

தோகா : 4 முறை உலக சாம்பியனான ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்து ஜப்பான் அணி வெற்றி பெற்றது.

பெனால்டி வாய்ப்பு...

கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்று 'ஈ' பிரிவில் நடந்த போட்டியில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி- ஜப்பான் அணிகள் மோதின. கலிபா சர்வதேச மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இரு அணியின் முன்கள வீரர்களும் தொடக்கம் முதலே கோல் அடிக்க கடுமையாக போராடினர். ஆட்டத்தின் 33 வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணியின் இல்கே குண்டோகன் கோல் அடித்து அசத்தினார்.

கைகூடவில்லை...

இதற்கு பதில் கோல் திருப்ப ஜப்பான் அணி எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் ஜெர்மனி 1-0 என்ற கனக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து 2வது பாதி ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தில் ஜெர்மனியே ஜெயிக்கும் என நினைத்து கொண்டிருந்த வேளையில் ரிஸ்து டோன் ( 75வது நிமிடம்), டகுமா ஆசானோ ( 83 நிமிடம்) அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.

இதற்கு பதில் கோல் திருப்ப ஜெர்மனி எடுத்த முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.முடிவில் 4 முறை உலக சாம்பியனான ஜெர்மனியை ஜப்பான் வீழ்த்தி கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து