முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த தி.மு.க. நிர்வாகியின் மனைவிக்கு செல்போனில் முதல்வர் ஆறுதல்

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      தமிழகம்
Stalin 2022 01 07

Source: provided

சென்னை :  இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த தி.மு.க. நிர்வாகியின் மனைவிக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் செல்போனில் ஆறுதல் கூறினார். 

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த பி.என்.பட்டி பேரூராட்சிக்குட்பட்ட தாளையூரை சேர்ந்த 85 வயதான முதியவர் தங்கவேல், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, உடலில் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி தங்கவேலின் இறுதி சடங்கிற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் முதல் கட்டமாக ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை வழங்கினார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தாளையூரில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த தங்கவேலின் உருவப்படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு மலர் தூவி அஞ்சலி செலுத்தி குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் முதல்வர்  மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தலைமை கழகம் சார்பில் ரூ.5 லட்சமும், மாவட்ட கழகம் சார்பில் ரூ.5 லட்சமும் என மொத்தம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை தங்க வேலின் மனைவி ஜானகியிடம் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு ஜானகியிடம் ஆறுதல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து