முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரை இழிவாக பேசியவர்களுக்கு குஜராத் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்: அமித்ஷா 2-ம் கட்ட தேர்தல் பிரசாரம்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      அரசியல்
amit-shah 2022-12-01

பிரதமர் நரேந்திர மோடியை இழிவாகப் பேசிய காங்கிரஸ் கட்சிக்கு குஜராத் மக்கள் தங்கள் வாக்குப் பெட்டி மூலம் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று (டிசம்பர் 1) நடைபெற்றது. வாக்காளர்கள் எளிதாக வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. நேற்றைய தேர்தலில் 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 670 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

குஜராத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற இருக்கிறது. 93 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இந்த தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரம் நாளையுடன் (டிசம்பர் 3) முடிவுக்கு வர உள்ளது. இதை முன்னிட்டு இந்த தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிர வாக்குவேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. 

முதல்வர் புபேந்திர படேல், மெஹ்சானா மாவட்டத்தில் வாகனத்தில் இருந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக பயணித்து வாக்குகளை கோரினார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 3.30 மணி அளவில் நாரதா காம் என்ற இடத்தில் இருந்து காந்திநகர் தெற்கு தொகுதி வரை அவர் சாலைமார்க்கமாக பயணித்து வாக்குகளை சேகரித்தார்.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அகமதாபாத் நகரில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சாலையில் வாகனத்தில் பயணித்தவாறு அவர் வாக்குகளை கோரினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், "குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டிருக்கிறார். குறிப்பாக, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டன. மின்சார பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டு 24 மணி நேரமும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், மாணவர்களின் இடைநிற்றல் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது.

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் நரேந்திர மோடியை ராவணன் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி எப்போதெல்லாம் நரேந்திர மோடியை கடும் சொற்களால் விமர்சிக்கிறதோ அப்போதெல்லாம், குஜராத் மக்கள் தங்கள் வாக்குப் பெட்டி மூலம் அக்கட்சிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இம்முறையும் அப்படி ஒரு பதிலடியை குஜராத் மக்கள் அளிப்பார்கள்" இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து