முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பச்சை நிற ஆவின் பாக்கெட் பாலுக்கு தட்டுப்பாடு இல்லை : நிர்வாகம் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      தமிழகம்
Aavin 2022-12-01

Source: provided

சென்னை : தமிழகத்தில் பச்சை நிற ஆவின் பாக்கெட் பாலுக்கு தட்டுப்பாடு இல்லை என்று ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. 

இதுகுறித்து ஆவின் மேலாண்மை இயக்குநர் ந.சுப்பையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆவின் பச்சை நிற பாக்கெட் பாலுக்கு தட்டுப்பாடு எங்கும் ஏற்படவில்லை. ஆரஞ்சு நிற பாக்கெட் பாலின் சில்லறை விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, சென்னையில் ஒன்றரை லட்சம் லிட்டர் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை உயர்ந்துள்ளது. மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப, பாலை வழங்கி வருகிறோம்.

எனவே, பால் தட்டுப்பாடு எங்கும் இல்லை. பச்சை நிற பாக்கெட் பால், ஆவின் பாலகம், மொத்த விற்பனையகத்தில் கிடைக்கும். அட்டைதாரர்களுக்கும் வழக்கம்போல கிடைக்கும். ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் அல்லது வேறு ஏதாவது ஆவின் பால் தட்டுப்பாடு என்றால், ஆவின் நிர்வாகத்தின் உதவி எண் 18004253300-ல் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து