Idhayam Matrimony

77 விருதுகளை குவித்த சஷ்தி குறும்படம்

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2022      சினிமா
Shashti 2022 12 05

Source: provided

Cathy & Raphy பிலிம்ஸ் தயாரிப்பில், ஜூட் பீட்டர் டேமியான் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம் சஷ்தி. பெறாத மகனுக்காக தியாகம் செய்யத்துணிந்த தாயின் அன்பு தான் சஷ்தி குறும்படத்தின் ஒரு வரிக்கதை. 30 நிமிடங்களிள் உருவாகியுள்ள இதில் செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, டாக்டர் SK காயத்ரி, ஹாரிஸ், மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். 35 சர்வதேச  திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 77 விருதுகளை வென்றுள்ள இந்த குறும்படத்தின், திரையிடல் மற்றும் விருது பெற்ற கலைஞர்களை கவுரவிக்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கே.பாக்யராஜ் கலந்து கொண்டு இந்த குறும்படத்தில் பணியாற்றி பல்வேறு பிரிவுகளில் சர்வதேச விருதுகளை வென்ற கலைஞர்களுக்கு அந்த விருதுகளை இயக்குனர் கே.பாக்யராஜ் வழங்கி கௌரவித்தார். அப்போது பேசிய இக்குறும்படத்தின் இயக்குனர் ஜூட் பீட்டர் டேமியான், இந்த குறும்படத்தை ஒரு வாரத்திற்குள் படமாக்கி முடித்து விட்டாலும் இதற்கான கதை மற்றும் திரைக்கதையை உருவாக்க ஒரு வருட  காலத்திற்கு மேல் ஆனது. படப்பிடிப்பின்போதே லைவ் ரெக்கார்டிங் முறையில் வசனங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டன என்றார். மேலும்,சினிமாவில் பணியாற்றும் கலைஞர்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லை.. அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத என எந்த துறையினருக்கும் பிஎப். ஈஎஸ்ஐ போன்றவை கிடைக்கப்பெற வேண்டும் என சட்டம் சொல்கிறது.. அவற்றை இந்த சினிமா கலைஞர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து