முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் போராட்டத்தில் கைதானவருக்கு தூக்கு

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      உலகம்
Iran 2022 12 -09

ஈரான் போராட்டத்தில் கைதானவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

ஈரானில் ஹிஜாப் அணியாத மாஷா ஆமினி என்ற 22 வயதே ஆன இளம்பெண்ணை அந்த நாட்டின் போலீசார் கைது செய்ததும், அவர் போலீஸ் காவலில் கடந்த செப்டம்பர் 16-ம் தேதியன்று, கொல்லப்பட்டதும் அங்கு பெண்களை போராட்டக்களத்தில் இறங்கி போராட வைத்தது. இந்தப் போராட்டத்தை ஈரான் அரசு ஒடுக்கியது. இதில் 475 பேர் கொல்லப்பட்டனர். 18 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த போராட்டத்தின் போது பாதுகாப்பு படை வீரர் ஒருவரை கத்தியால் தாக்கியதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டவர் மோசென் ஷெகாரி ஆவார். அவருக்கு ஈரான் புரட்சிகர கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரைத் தூக்கில் போட்டு தண்டனையை நிறைவேற்றி உள்ளனர். இந்த போராட்டங்களில கைதாகி மரண தண்டனை விதித்து தூக்கில் போட்டு அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பது இதுவே முதல் முறை ஆகும். 

இதற்கு நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரைச் சேர்ந்த ஈரான் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனர் மக்மூத் அமிரி மொகதாம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து