முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் 'ட்ரோன்' சுட்டு வீழ்த்தப்பட்டது

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2022      இந்தியா
Pak 2022-12-26

Source: provided

புதுடில்லி : இந்தியாவின் எல்லையில் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோனை பாதுகாப்பு படையினர் சுட்ட வீழ்த்தினர்.

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, பி.எஸ்.எப் அதிகாரிகள், ரோந்து பணியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சென்ற பாதுகாப்பு படையினர், அங்கு பறந்து கொண்டிருந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தினர். இதையடுத்து ட்ரோனை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது குறித்து பி.எஸ்.எப் வீரர் கூறுகையில், நாங்கள் அதை வேலிக்கு அருகில் கண்டோம், அது கேமராவுடன் கூடிய ட்ரோன். இது சீனாவில் தயாரிக்கப்பட்டது. நாங்கள் ட்ரோனை, சுட்டு இறுதியில் அதை மீட்டோம். அப்பகுதியில் இன்னும் தேடுதல்கள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த டிசம்பர் 21, நவம்பர் 26 போன்ற தேதிகள் கூட இது போன்ற அத்துமீறி நுழைந்த ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், மூன்றாவதாக இந்த ட்ரோன் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து