முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்டர் 19 மகளிர் உலகக்கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2023      விளையாட்டு
Women s 2023 01 27

Source: provided

வெல்லிங்டன் : அண்டர் 19 மகளிர் உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

பந்துவீச்சு தேர்வு...

19 வயது உட்பட்டவருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று அரை இறுதி போட்டி நடைபெற்றது. முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பார்ஷவி சோப்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சவுமியா - ஸ்வேதா...

106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனையாக ஷஃபாலி வர்மா - ஸ்வேதா செஹராவத் களமிறங்கினர். ஷஃபாலி வர்மா 10 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சவுமியா திவாரி, ஸ்வேதா செஹராவத்துடன் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய ஸ்வேதா செஹராவத் 39 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். இந்த உலக கோப்பையில் இது இவருக்கு 3-வது அரை சதம் ஆகும். இந்திய அணி 95 ரன்கள் இருந்த போது சவுமியா திவாரி போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். 

இறுதிக்கு முன்னேற்றம்...

இறுதியில் இந்திய அணி 14.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. மற்றொரு அரையிறதி போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி இந்தியாவுடன் மோதும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து