முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட் அறிவிப்பு எதிரொலி: ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது சவரன் ஒன்றுக்கு ரூ.720 அதிகரிப்பு

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      தமிழகம்
Gold 20221 02 02

Source: provided

சென்னை: மத்திய பட்ஜெட் அறிவிப்பு எதிரொலியாக ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 44 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சவரன் ஒன்றுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை தினமும் ஒரு விலை என்ற அடிப்படையில், ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் பெரும்பாலும் உயர்வை நோக்கியே தங்கம் விலை பயணித்தது. இதனால் கடந்த மாதத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.41 ஆயிரம், ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என்ற நிலையை கடந்து இருந்தது.

இந்த நிலையில் தங்கத்தின் இறக்குமதி வரியில் மாற்றம் இருக்கலாம் என கருதியதால், தங்கத்தை பலரும் இருப்பு வைக்கத் தொடங்கினார்கள். இதனால் கடந்த மாதம் 29, 30-ந்தேதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன் அதன் விலை சற்று குறைந்து இருந்தது.

நேற்று முன்தினம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44,000ஐ தாண்டியது. மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மற்றும் வைரம் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டது. இதனால் மீண்டும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடலாம் என கூறப்பட்டது. அதன்படி, மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி உயர்வு அறிவிப்பு எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை கண்டிருக்கிறது.

இதற்குமுன் கொரோனா காலத்தில் 2020ல் ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு கிராம் அதிகபட்சமாக ரூ.5,420 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.43,360ஆக உயர்ந்திருந்ததே உச்சமாக இருந்தது. இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, சவரன் ரூ.43,800க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.30 உயர்ந்து ரூ.77.30க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.44,000ஐ தாண்டியது.

ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.90ம், சவரனுக்கு ரூ.720ம் அதிகரித்து ரூ.44,040ஆக உள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,955 டாலர் உயர்ந்து, மத்திய அரசின் வரி விதிப்பும் சேர்ந்ததால் விலை உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் ஒரு கிராம் ரூ.76ல் இருந்து ரூ.1.80 அதிகரித்து ரூ.77.80ஆக விற்பனையானது. சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பணவீக்கம் காரணமாக வரும் நாட்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து