முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று தொடங்குகிறது

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      ஆன்மிகம்
Thiruvannamalai 2023 02 03

Source: provided

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பவுர்ணமி கிரிவலம் இன்று(சனிக்கிழமை) இரவு 10.41 மணிக்கு தொடங்கி நாளை 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.48 மணிக்கு நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். 

இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று(சனிக்கிழமை) இரவு 10.41 மணிக்கு தொடங்கி நாளை 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.48 மணிக்கு நிறைவடைகின்றது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து