முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடி - பன்னீர்செல்வத்துடன் அண்ணாமலை அடுத்தடுத்து சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      தமிழகம்
EPS OPS 2023 02 03

Source: provided

சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் பா.ஜ.க. தலைவர்கள் சி.டி.ரவி, அண்ணாமலை மற்றும் கரு.நாகராஜன் ஆகியோர் நேற்று சமரச முயற்சியில் ஈடுபட்டனர். 

முதலில் அவர்கள் அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு காலை 8.15 மணிக்கு சென்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்தனர். பதிலுக்கு அவரும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் உடன் இருந்தார். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி தன் நிலைப்பாட்டை உறுதிபட தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

அதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட பா.ஜ.க. தலைவர்கள் பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினர்.  இந்த சந்திப்பின் போது வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், கரு.நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பும் சுமார் 1 மணி நேரம் நீடித்தது. ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை முடிந்ததும் பா.ஜ.க. தலைவர்கள் தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமையகமான கமலாலயத்துக்கு சென்று அங்கும் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து