Idhayam Matrimony

தெலுங்கானாவில் விரைவில் திறக்கப்படவிருந்த புதிய தலைமை செயலக கட்டிடத்தில் தீ விபத்து

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      இந்தியா
Telangana 2023 02 03

Source: provided

ஐதராபாத் : தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகம் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலக கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் தரை தளத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி, அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை வருகிற 17-ம் தேதி அம்மாநில முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் திறந்து வைக்கத் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து