எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : வருமானவரி உச்சவரம்பு உயர்வால் 1 கோடி பேர் பயன்பெறுவார்கள் என நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 1-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பலரும் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்தார்.
இந்தியாவில் 6 கோடிக்கும் அதிகமான வரி செலுத்துவோர் உள்ளனர். இப்போது ரூ.3 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி கடந்த ஆண்டு மார்ச் இறுதி வரை 6.4 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இதில் 80 சி பிரிவின்படி முதலீடுகள் மீதான விலக்குகள் காரணமாக ரூ.84 ஆயிரம் கோடிக்கு வருமானவரி தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருமானவரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டதன் காரணமாக சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் என நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிய வரிவிதிப்பு நடைமுறை மூலம் அனைத்து வரி செலுத்துவோருக்கும் மிகப்பெரிய அளவில் ஆறுதலாக அமைந்துள்ளது. தனிநபர்கள் ரூ.7 லட்சம் வரை எந்த வரியையும் செலுத்த வேண்டியதில்லை. சேமிப்பின் காரணமாக அவர்கள் போடக்கூடிய விலக்குகளில் அளவை பொருட்படுத்த வேண்டியதில்லை என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


