முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: நாக்பூரில் இந்திய வீரர்கள் பயிற்சி

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      விளையாட்டு
Indian players 2023 02 03

Source: provided

நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் இந்திய வீரர்கள் நேற்று முதல் தங்களுடைய பயிற்சியைத் தொடங்கினர்.

சுற்றுப்பயணம்....

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணி: 

ரோஹித் சர்மா, செட்டேஷ்வர் புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, ஷுப்மன் கில், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், கே.எல். ராகுல், கே.எஸ். பாரத், முகமது ஷமி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், இஷான் கிஷன், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ். ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

காயத்தால் விலகல்...

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்ட்டி வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. அதன் பிறகு இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெற்றிருந்தார். அதன் பிறகு திடீரென்று தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் இடம் பெறவில்லை.

இடம்பெறுவார்...

முதுகு வலி காரணமாக இதுவரையில் உடற்பயிற்சிகள் செய்து வந்த பும்ரா தற்போது பந்து வீச தொடங்கியிருக்கிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் வலைபயிற்சியில் பும்ரா ஈடுப்பட்டிருந்த போது அவருக்கு எந்த வித கஷ்டமும் நேரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகளில் அவர் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

பெங்களூரில்...

இதற்கிடையே நாக்பூரில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிகான ஆரம்பக்கட்டப் பயிற்சிகளை பெங்களூரில் மேற்கொண்டு வருகிறது ஆஸ்திரேலிய அணி. சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் பயிற்சி எடுத்து வருகிறார்கள். அஸ்வினைப் போல பந்துவீச்சு முறையைக் கொண்டுள்ள குஜராத்தைச் சேர்ந்த 21 வயது மஹீஸை வலைப்பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளார்கள்.  இந்நிலையில் இந்திய வீரர்கள் நாக்பூரில் நேற்று வலைப்பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள். இதற்கான புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து