முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச புடவைக்கான டோக்கன் வாங்க சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      தமிழகம்
Va-iyampa-i 2023 02 04

Source: provided

வாணியம்பாடி : வாணியம்பாடியில் தனியார் நிகழ்ச்சியில் இலவச புடவைக்கான டோக்கன் வாங்க சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் மரணம் அடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வழங்குவதாக தனியார் நிறுவனம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தத் தகவலின் அடிப்படையில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் குவிந்தனர். இதன் காரணமாக அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பல பெண்கள் மயக்கம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்களில், 4 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர். மேலும் ,12 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து வருவாய் துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து