முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்ரிடியின் மகளை மணந்தார் பாக். வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன்ஷா அப்ரிடி

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      விளையாட்டு
Shaheensha 2023 02 04

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஷாகீன் ஷா அப்ரிடி. இவருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சகீத் அப்ரிடியின் மகள் அன்ஷாவுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. 

ஷாகீன்ஷா-அன்ஷா திருமணம் கராச்சியில் நடந்தது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், சர்பிராஸ் அகமது, நசீம் ஷா, சதாப்கான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், பிரபல ஸ்குவாஸ் வீரர் ஜஹாங்கீர்கான் உள்பட பலர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

திருமணம் தொடர்பான வீடியோக்கள், புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பாகிஸ்தான் வீரர்களான ஹாரிஸ் ரவூப், ஷதாப் கான் ஆகியோர் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். அந்த வரிசையில் தற்போது ஷாகீன்ஷா அப்ரிடியும் இணைந்து கொண்டனர். ஷாகீன்ஷா அப்ரிடி 25 டெஸ்டில் விளையாடி 99 விக்கெட்டும், 32 ஒருநாள் போட்டியில் 62 விக்கெட்டும், 47 இருபது ஓவர் ஆட்டத்தில் 58 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார். பாகிஸ்தான் அணிக்காக 3 வடிவிலான போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து