முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொலைபேசியில் மிரட்டல்: நடிகர் எஸ்.வி.சேகர் போலீசில் புகார்

சனிக்கிழமை, 27 மே 2023      சினிமா
SV-Sekhar 2023-05-27

Source: provided

சென்னை : தனக்கு வந்த தொலைபேசி மிரட்டல் குறித்து நடிகர் எஸ்.வி. சேகர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். 

மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும் நடிகருமான எஸ்.வி.சேகர் மந்தைவெளியில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு எஸ்.வி.சேகர் வீட்டில் இருந்த போது மர்ம நபர் ஒருவர் அவரது செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். 

இதைத் தொடர்ந்து எஸ்.வி.சேகர் மயிலாப்பூர் போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து எஸ்.வி.சேகர் கூறியதாவது, 

கடந்த 22-ம் தேதி மதியம் வீட்டில் இருந்தபோது எனது செல்போனில் ஒருவர் தொடர்பு கொண்டு என்னை ஒருமையில் ஆபாசமாக தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்கள் கூறுவதாக கூறி என்னை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். ஆபாச வார்த்தைகள் அதிகரிக்கவே நான் போனை கட் பண்ணினேன். 

மீண்டும் சில நிமிடங்களில் 3 போன்கள் தொடர்ந்து வந்து மீண்டும் ஆபாச வார்த்தைகளுடன் பேசி மிரட்டினர். என்னுடைய வீட்டில் ஏற்கனவே 2 முறை பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடந்தது. நான் இந்துத்துவாவுக்கு ஆதவராக பேசி வருவதாக அடிக்கடி இந்த அச்சுறுத்தல் வருகிறது. 

இந்த நிலையில் எனக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொண்டனர். எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் போலீசாரே பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 days 17 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 day ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து