முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவகாத்தி - ஜல்பைகுரி இடையேயான அசாமின் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

திங்கட்கிழமை, 29 மே 2023      இந்தியா
Vande-Bharat-Train 2023-05-

Source: provided

புதுதில்லி : குவகாத்தி - ஜல்பைகுரி பகுதிகளுக்கு இடையேயான அசாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை திங்கள்கிழமை மதியம் காணொலிக் காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

குவகாத்தி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அசாம் ஆளுநர் குலாம் சந்த் கட்டாரியா, முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ஆகியோல் பங்கேற்றனர். காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பச்சைக் கொடியை அசைத்துவைத்து, வந்தே பாரத் ரயிலைத் தொடங்கிவைத்தார்.

இந்த அதிநவீன வந்தே பாரத் விரைவு ரயில் அசாம் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கல்வி, வணிகம், வேலை வாய்ப்புத் துறைகளைமேம்படுத்த உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

குவகாத்தி - ஜல்பைகுரி பகுதிகளுக்கு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயில், விரைவில் அசாம் - மேற்கு வங்கம் இடையே இயக்கப்படும் வகையில் விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது. இந்த தொலைவை இதுவரை இயக்கப்படும் ரயில்கள் 6.30 மணி நேரத்தில் கடக்கும் பட்சத்தில், வந்தேபாரத் ரயில் 5.30 மணி நேரத்தில் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில், வடகிழக்கு மாநிலங்கள், பிற மாநிலங்களுடனான ரயில்வே இணைப்புகளை பெறுவதில் முன்னிலையில் இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து