முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸை ஸ்மார்ட் கார்டாக வழங்க அரசு திட்டம்

திங்கட்கிழமை, 29 மே 2023      தமிழகம்
bus-2022 08 25

சென்னை, தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸை ஸ்மார்ட் கார்டாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அக்னி வெயிலின் தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 7-ந்தேதி 1 முதல் பிளஸ்-2 வரை அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள், அரசு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.யில் படிக்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சத்து 14 ஆயிரம் பேர் பயனடையலாம் என கணக்கிட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டபோது இலவச பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அப்போது சீருடை அணிந்த மாணவர்கள் மற்றும் கல்லூரி அடையாள அட்டைகளை காண்பிக்கும் மாணவர்கள் எந்த தடையும் இல்லாமல் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும் சில இடங்களில் பஸ்களில் மாணவர்களுக்கும், நடத்துனர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 2022-23 ஆம் கல்வி ஆண்டில் நடுப்பகுதியில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்திலும் பஸ் பாஸ் இல்லாத காரணத்துக்காக மாணவர்கள் யாரும் இறக்கி விடப்படவில்லை.

நடப்பாண்டில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் ஸ்மார்ட் கார்டாக வழங்குவதற்கான பணிகளை முன்னெடுத்து வருவதாக போக்குவரத்து துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, எல்லா மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க திட்டமிட்டு இருக்கின்றோம். மாணவர்கள் பயணம் செய்யும்போது ஸ்மார்ட் கார்டு எடுத்துச் செல்லுங்கள். கல்வி நிறுவனங்களிடம் இருந்து இலவச பாஸ் கோரிக்கையை பெற்ற பின்னரே பயனாளிகள் இறுதி எண்ணிக்கை தெரியவரும்.

போக்குவரத்து துறையின் தொழில்நுட்ப கிளையான சாலை போக்குவரத்து நிறுவனம் மாணவர்களுக்கான பஸ் பயண அட்டைகளை வழங்கும் செயல்முறையை தொடங்கியுள்ளது. மேலும் ஸ்மார்ட் கார்டு அச்சிடுவதற்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற ஜூன் அல்லது ஜூலை மாத இறுதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து