முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது அணை விவகாரம்: கர்நாடக துணை முதல்வருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

புதன்கிழமை, 31 மே 2023      தமிழகம்
duraimurugan-2023-05-01

Source: provided

சென்னை : காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்வர்  பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

தமிழக- கர்நாடக எல்லையில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட திட்டமிட்டுள்ள கர்நாடகா அதற்கான நிதியை ஒதுக்கி ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

அணை கட்ட இடைக்கால தடை விதிக்கப்பட்ட சூழலில் மத்திய அரசின் சுற்றுசூழல் அமைச்சகமும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. 

இந்த நிலையில், மேகதாது அணை திட்டத்தை காலதாமதமின்றி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக மாநில அதிகாரிகளுக்கு துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பேச்சுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். அண்டை மாநிலங்களுடன் நட்புறவை தொடரும் எண்ணம் இருப்பதாக தெரியவில்லை. டெல்டாவில் தூர்வாரும் பணி முறையாக நடக்கிறது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து