முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி ஓ.டி.டி. படைப்புகளிலும் புகையிலை குறித்த எச்சரிக்கை : மத்திய சுகாதாரத்துறை உத்தரவு

புதன்கிழமை, 31 மே 2023      இந்தியா
Cigarette 2023-05-31

Source: provided

புதுடெல்லி : திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களில் புகையிலை பொருட்கள் குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுவதைப் போன்று இனி ஓ.டி.டி. படைப்புகளிலும் இடம்பெற வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்தும் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறும்போது அது குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்று வருகின்றன. இது தற்போது திரையரங்குகளில் வெளியாகும் படங்களில் மட்டுமே இடம்பெற்று வரும் நிலையில், இதனை ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களிலும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துடனான ஆலோசனைக்குப் பிறகு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களின் விதிகளை திருத்தியமைத்து நேற்று (மே 31) மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆன்லைன் உள்ளடக்கங்களை வெளியிடுபவர்கள் இந்த புதிய விதிகளை பின்பற்றத் தவறினால், மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற முன்னணி ஓ.டி.டி. தளங்கள், 30 வினாடிகள் ஓடக்கூடிய புகையிலை குறித்த எச்சரிக்கை காணொலியை உள்ளடக்கத்தின் தொடக்கம் மற்றும் நடுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவை தவிர புகையிலை எச்சரிக்கை தொடர்பான 20 வினாடி ஆடியோ கிளிப்பிங்கும் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து