எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பெங்களூரு: அம்பதி ராயுடுவை 4-ம் நிலைக்கென்றே தயார்படுத்திய பிறகு 2019 உலகக் கோப்பை அணியில் அவரைத் தேர்வு செய்யாமல் விட்டு விராட் கோலியும், ரவிசாஸ்திரியும் பெரிய தவறிழைத்து விட்டனர் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
ஓய்வு அறிவிப்பு...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்தார். இவரது ஐபிஎல் வாழ்க்கையில் 6-வது கோப்பையை வென்ற திருப்தியுடன் ராயுடு ஓய்வு பெற்றார். ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பு தனது பயணம் நிறைவு பெறுவதாக ராயுடு பிரியாவிடை கொடுத்தார். சிஎஸ்கே ஐபிஎல் 2023 கோப்பையை வென்று ராயுடுவுக்கு ஒரு அருமையான பிரியாவிடை பரிசை அளித்தது.
சிறப்பான ஸ்டிரைக்....
அம்பதி ராயுடு 55 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 1694 ரன்களை 47.05 என்ற அருமையான சராசரியை எடுத்துள்ளார். 3 சதங்களையும் 10 அரைசதங்களையும் கூட எடுத்துள்ளார் ராயுடு. அவரது ஸ்ட்ரைக் ரேட் 79.04, கொஞ்சம் கூடுதல் வாய்ப்பு கொடுத்திருந்தால் ஸ்ட்ரைக் ரேட்டை இன்னும் அதிகப்படுத்தியிருப்பார். டி20 மொத்த கரியரில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 125 என்பது அவரது டவுன் ஆர்டருக்குக் குறைந்ததல்ல.
நியூசி.க்கு எதிராக....
பிப்ரவரி 3, 2019- அம்பதி ராயுடு வெலிங்டனில் நடந்த 5வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக 90 ரன்களை விளாசினார். அதில் 8 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடங்கும். அந்தப் போட்டியில் இவர் ஸ்ட்ரைக் ரேட் 80, மாறாக விஜய் சங்கரின் ஸ்ட்ரைக் ரேட் 70 தான். இவருக்கு கேதார் ஜாதவ்வே பரவாயில்லை என்பது போல் இதே போட்டியில் கேதார் ஜாதவ் தான் எடுத்த 34 ரன்களை 45 பந்துகளில் எடுத்து ஸ்ட்ரைக் ரேட்டை 75 ஆக வைத்திருந்தார். ஹர்திக் பாண்டியாதான் டாப். 22 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 45 ரன்களை அடித்து நொறுக்கினார்.
தேர்வாகவில்லை....
இந்திய அணி 252 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 217 ரன்களுக்குச் சுருண்டு தொடரையும் 4-1 என்று இந்தியா வென்றது. ஆனால் அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராயுடு 13, 18, 2 என்று சொதப்பவே அவரது இடம் கேள்விக்குறியானது. ஆனால் ராயுடுவை ஒதுக்கி விட்டு விஜய் சங்கரைத் தேர்வு செய்து விட்டு அவரை முப்பரிமாண வீரர் 3டி வீரர் என்று கூறினார் தேர்வாளர் எம்.எஸ்.கே. பிரசாத். இதை சூசகமாகக் கேலி செய்த ராயுடு, நான் இந்த உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யாதது நல்லதாகப் போய் விட்டது, நான் 3டி கண்ணாடி அணிந்து கொண்டு போட்டியை பார்க்கலாமே என்று செமயாக கிண்டலடித்தார். இந்நிலையில் விராட் கோலி கேப்டனாக இருந்த போது பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே முதல் முறையாக கோலி-ரவிசாஸ்திரி கூட்டணியின் தவறு குறித்து மவுனம் கலைத்துள்ளார்:
மாபெரும் தவறு...
“2019 உலகக்கோப்பையில் அம்பதி ராயுடு ஆடியிருக்க வேண்டும். ஆம்! நிச்சயமாக! இதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அவரைத் தேர்வு செய்யாதது, ஒதுக்கியது மாபெரும் தவறு. நீண்ட காலமாக அவரை உலகக்கோப்பையில் 4ம் நிலைக்காக அவரை ஒருநாள் போட்டிகளில் தயார் செய்து விட்டு அவர் பெயரைப் பார்த்தால் காணவில்லை. இது மிகவும் ஆச்சரியம்தான்!” என்று ஜியோ சினிமாவில் அனில் கும்ப்ளே கருத்து கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பன்னீர் மஞ்சூரியன்![]() 1 day 6 hours ago |
சிக்கன் சாசேஜ்![]() 5 days 5 hours ago |
பிரட் குலாப் ஜாமுன்![]() 1 week 1 day ago |
-
சந்திரபாபு வழக்கு: நீதிபதி விலகல்
27 Sep 2023புதுடெல்லி : ஆந்திராவில் திறன் மேம்பாட்டு வாரியத்தில் நடந்த ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
அனைத்து நதிகளையும் இணைப்பதே காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு : தஞ்சாவூரில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
27 Sep 2023தஞ்சாவூர் : காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமானால், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்று தே.மு.தி.க.
-
உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு : காயத்தால் ஹசரங்கா நீக்கம்
27 Sep 2023கொழும்பு : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டது.
-
தமிழக மீனவர்கள் 17 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு
27 Sep 2023கொழும்பு : இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் 28-09-2023.
28 Sep 2023 -
டி20 கிரிக்கெட்; அதிக ரன்கள், குறைந்த பந்தில் சதம் மற்றும் அரைசதம் : இன்னும் பல சாதனைகள் படைத்த நேபாளம்
27 Sep 2023ஹாங்சோ : ஆசிய விளையாட்டு போட்டிகளின் டி20 கிரிக்கெட்டில் குரூப் ஏ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நேபாளம்-மங்கோலியா அணிகள் மோதின.
-
லைவ் அப்டேட்ஸ்: இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்வு
27 Sep 2023பெய்ஜிங் : பதக்க பட்டியலில் 6-வது இடத்தில் இந்தியா..!
-
ஆட்டம் மழையால் பாதியில் நின்றாலும் பல பேட்டிங் ரெக்கார்டுகளை காலி செய்த இங்கிலாந்து!
27 Sep 2023பிரிஸ்டல் : பிரிஸ்டலில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற இங்கிலாந்து - அயர்லாந்து 3-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு இன்னிங்ஸ் கூட முழுதும் நிறைவுறாமல் முடிந்து போனாலும் இங
-
உலகக்கோப்பையுடன் தாயகம் திரும்புவோம்' - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை
27 Sep 2023லாகூர் : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா புறப்படுவதற்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் லாகூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.&nbs
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியை அனுப்ப மத்திய அரசு முடிவு
28 Sep 2023புது டெல்லி, மணிப்பூரில் இரண்டு மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் மாநிலத்தில் மீண்டும் வன்முறை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மூத்த ஐ.பி.எஸ்.
-
சர்வதேச தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக் கழகம்
28 Sep 2023புது டெல்லி, சர்வதேச தரவரிசை பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக் கழகம் 500-600 இடங்களில் இடம் பிடித்துள்ளது.
-
பாகிஸ்தானில் ஒரேநாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல்
28 Sep 2023இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஒரே நாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
-
ம.பி.யில் அரை நிர்வாண கோலத்தில் வீடு, வீடாக உதவி கேட்ட சிறுமி
28 Sep 2023உஜ்ஜைன், மத்திய பிரதேசத்தில் ரத்தம் வழிந்தோட, அரை நிர்வாண கோலத்தில் வீடு, வீடாக சென்று 12 வயது சிறுமி உதவி கேட்ட அவலம் நடந்துள்ளது
-
அமெரிக்க உளவு பிரிவு அதிகாரியை கடித்து வைத்த பைடனின் செல்ல நாய்
28 Sep 2023நியூயார்க், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 2 வயது செல்ல நாய் அந்நாட்டு உளவு பிரிவு அதிகாரி ஒருவரை கடித்து வைத்து உள்ளது.
-
நோயை விட சிகிச்சை கடுமையாக இருக்கக் கூடாது: எலான் மஸ்க்
28 Sep 2023வாஷிங்டன், நோயை விட சிகிச்சை கடுமையானதாக இருக்க கூடாது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
உஸ்பெகிஸ்தான் விமான நிலையத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு
28 Sep 2023தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தானின் தலைநகர் தாஷ்கண்ட்டில் உள்ள விமான நிலையத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
-
ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஐதராபாத்தை சேர்ந்தவர் தயாரிப்பு
28 Sep 2023திருப்பதி, ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஒன்றை தயாரித்துள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர்.
-
தெலுங்கானா பள்ளிகளில் அக். 24-ம் தேதி முதல் காலை உணவு திட்டம் தொடக்கம்
28 Sep 2023ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தொடக்க பள்ளிகளில் அக்டோபர் 24-ம் தேதி முதல் காலை உணவு திட்டம் தொடங்கப்படவுள்ளது.
-
வட கொரியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட அமெரிக்க வீரா்
28 Sep 2023பியாங்கியாங், வட கொரியாவுக்குள் கடந்த ஜூலை மாதம் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ராணுவ வீரா் ட்ராவிஸ் கிங், திரும்ப ஒப்படைக்கப்பட்டார்.
-
போதை பொருள்கள் வழக்கில் பஞ்சாப் காங். எம்.எல்.ஏ. கைது
28 Sep 2023சண்டிகர்:பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. சுக்பால்சிங் கைரா. இவர் மீது கடந்த 2015-ம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.
-
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
28 Sep 2023புது டெல்லி:வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
-
ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர் தற்கொலை
28 Sep 2023கோட்டா:ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த மற்றொரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மிலாடி நபி: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
28 Sep 2023புது டெல்லி:மிலாடி நபியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்று முழு அடைப்பு போராட்டம் எதிரொலி:கர்நாடகத்திற்கு தமிழக வாகனங்கள் செல்ல தடை பேருந்துகள் அனைத்தும் ஓசூரில் நிறுத்தம்
28 Sep 2023பெங்களூரு:தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடக அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழக வாகனங்கள் கர்நாடகத்தி
-
புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்: சி.டி. ரவி
28 Sep 2023சென்னை:புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும் என்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.