முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனையில் உள்ள மனைவியை காண சிசோடியாவிற்கு ஒருநாள் ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      இந்தியா
Manish 2023-04-06

புதுடெல்லி, மருத்துவமனையில் உள்ள மனைவியை காண டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒருநாள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

‘மனீஷ் சிசோடியாவின் 49 வயதான மனைவி சீமா சிசோடியாவுக்கு ‘ஆட்டோ இம்யூன்’ பிரச்னை உள்ளது. ‘மல்டிபிள் ஸ்களீரோசிஸ்’ நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள மனைவியை சந்திக்க மனீஷ் சிசோடியாவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒருநாள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்படி இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனீஷ் சிசோடியா தனது மனைவி காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கலால் கொள்கை வழக்கில் பிப்ரவரியில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து