முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடவர் ஜூனியர் ஆசியக்கோப்பை ஹாக்கி: 4 - வது முறையாக பட்டம் வென்று உலகக்கோப்பைக்கு இந்தியா தகுதி

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      விளையாட்டு
Hockey 2023-06-02

Source: provided

சலாலா (ஓமன்) : ஆடவர் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் ஓமன் நாட்டிலுள்ள சலாலா நகரில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி உள்ளது இந்திய அணி. 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வாகை சூடியுள்ளது. இதன் மூலம் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கு இந்தி அணி தகுதிப்பெற்றுள்ளது.

லீக் ஆட்டத்தில் வெற்றி...

‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், தாய்லாந்து, சீன தைபே அணிகளும், ‘பி’ பிரிவில் மலேசியா, தென் கொரியா,வங்கதேசம், ஓமன், உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா 18-0 என்ற கோல்கள் கணக்கில் சீன தைபேவையும், 2-வது லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும் தோற்கடித்திருந்தது.

புள்ளிப்பட்டியலில்...

பாகிஸ்தான் அணியுடனான 3-வது லீக் போட்டி 1-1 என சமனிலும், தாய்லாந்து அணியுடனான 4-வது லீக் போட்டியில் 17-0 என்ற கோல்கள் கணக்கிலும் இந்தியா வெற்றி பெற்றது. அதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதே பிரிவில் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

தென் கொரியாவை...

அரையிறுதியில் தென் கொரியாவை 9-1 என்ற கோல் கணக்கில் இந்திய வென்றது. பாகிஸ்தான், மலேசியாவை வீழ்த்தியது. தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று முன்தினம் (ஜூன் 1) இறுதிப் போட்டியில் விளையாடின. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. இந்திய அணிக்காக அங்கத் மற்றும் ஆரய்ஜீத் ஆகியோர் முறையே ஆட்டத்தின் 13 மற்றும் 20-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தனர். 

உலகக் கோப்பைக்கு தகுதி... 

இதன் மூலம் இந்திய அணி ஜூனியர் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. ஆடவர் ஹாக்கி ஜூனியர் ஆசியக் கோப்பையை நான்காவது முறையாக வென்றுள்ளது இந்தியா. இதற்கு முன்னர் 2004, 2008 மற்றும் 2015-ல் இந்தியா கோப்பை வென்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து